கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி

 

கேரள மாநிலத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து புறக்கணித்து வருவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

கேரள மாநிலம் பாலகாட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. அந்தத் திட்டத்தை மீண்டும் பாலகாட்டில் செயல்படுத்த கோரி, பிரதமரிடம் மனு அளிப்பதற்காக முதல்வர் பினராயி விஜயன் நேற்று முன்தினம் டெல்லி வந்தார்.

 

ஆனால், பிரதமரை சந்திப்பதற்கு அவருக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பினராயி விஜயன், டெல்லியில் பிரதமர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும், அவரது கோரிக்கைக்கு பிரதமர் அலுவலகம் செவிசாய்க்க வில்லை.

 

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் நேற்று கூறியதாவது:

கேரள மாநிலத்தை பிரதமர் மோடி தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். கேரளா மீது மத்திய அரசு கொண்டுள்ள வெறுப்பின் காரணமாக, எங்கள் மாநிலத்தில் தொழில்துறை மிகவும் நலிவடைந்துள்ளது. இதுதொடர்பாக பிரதமரை சந்தித்து பேசுவதற்கு கூட எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

 

இந்தியாவில் உள்ள கூட்டாட்சி முறையை மத்திய அரசு மதிக்கவில்லை. முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, கூட்டாட்சி முறைக்கு மதிப்பளித்தது. குறைந்தபட்சம், மாநிலங்களின் தேவைகளை அது பரிசீலித்தது. ஆனால், தற்போதைய அரசானது, மாநிலங்களின் பிரச்சினைகளை அணுகுவதில் மோசமான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top