ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்!

 

ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி- பா.ஜ.க யுடனான கூட்டணி ஆட்சி முறிந்து, கவர்னர் ஆட்சி நடைபெறும் சூழலில், காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில், பா.ஜ.க வின்  மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இந்திய இராணுவம் தேவையற்ற கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக விடப்பட்டு இருக்கிறது என்றார். மெகபூபா முப்தியோ காஸ்மீரின் பாதுகாப்புதான் முக்கியம் என்கிறார்.இருவரின் பேச்சுக்கு பின்னால் இருப்பது இந்திய ராணுவத்திடமிருந்து காஸ்மீர் மக்களின் பாதுகாப்புதான் என்பது திட்டவட்டமாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று நாம் பயந்தது  நடந்து விட்டது

காஸ்மீர் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள ஹயுவன் [Huyuan] கிராமத்தில் நேற்று இந்திய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில், காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருக்கும் தோழர்கள் தனிஷ் காலிக்தார்,அதுல் அக்ரம் லோன்  [Danish Khaliq Dar , Adil Akram Lone] மற்றும் அடையாளம் தெரியாத நபர் என்னும் மூன்று பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

 

தனிஷ் காலிக்தார்,அதுல் அக்ரம் லோன் [Danish Khaliq Dar மற்றும் Adil Akram Lone ] தோழர்களின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது, இதில் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் கலந்து கொண்டு இந்திய ராணுவத்தின்  தொடர் தாக்குதலை கண்டித்தும், காஷ்மீரின் விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

காஷ்மீரின் விடுதலைக்காக தொடர்ந்து ஜனநாயக முறையில் போராடி கொண்டிருக்கும் தோழர்  அப்துல் க்ய்யூம் மட்டூ[ Abdul Qayoom Mattoo] இன்று கிஷ்த்வார் [Kishtwar ]பகுதியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இந்திய தேசியத்திற்கு எதிராக செயல்பட்டவர் என்னும் குற்றம் சுமத்தி பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த எட்டு அப்பாவி காஷ்மீரிய இளைஞர்களின் மீதும் இதேபோல தேசியத்திற்கு எதிராக முழக்கமிட்டனர் என்னும் வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆட்சியை விட்டு இறங்கியதும் பாஜக ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை அடையாளப்படுத்தி பிடிப்பதும் அவர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு பண்ணுவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top