கடைசி நிமிட கோலால் டியூனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 

 

உலகக்கோப்பை 2018 கால்பந்து தொடரில் நேற்று டியூனிசியாவை இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிக்கணக்கைத் தொடங்கியது, ஹாரி கேன் 2 கோல்களையும் அடித்தார், அதிலும் குறிப்பாக கடைசி நிமிடங்களில் அடித்த ‘தலையால் முட்டிய கோல்’ அபாரமான கோல் மூலம் ஹாரி கேன் இங்கிலாந்தின் ஹீரோவானார்.

 

உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்துத் தொடர்களில் 1950 முதல் 5 முறையே தங்களது தொடக்கப் போட்டியில் இங்கிலாந்து வென்றுள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

 

கடைசி நிமிடம் வரை 1-1 டிரா என்பது இங்கிலாந்துக்கு வலியை ஏற்படுத்தும் ஒன்று. 11வது நிமிடத்தில் ஹாரி கேன் முதல் கோலை அடிக்க கோலே போடாது என்று எதிர்பார்த்த நிலையில் டியூனிசியாவின் ஃபெர்ஜானி சஸி 35வது நிமிடத்தில் பெனால்டி மூலம் கோல் அடித்து சமன் செய்தது இங்கிலாந்துக்கு அதிர்ச்சியளித்தது.

 

ஆட்டம் தொடங்கி முதல் 3 நிமிடங்களிலேயே இங்கிலாந்து 3 கோல்களை அடித்திருக்க வேண்டும், ஆனால், முனைப்பற்ற தாக்குதல் ஆட்டமாக இருந்தது.

 

ஆனால் , இங்கிலாந்தின் ஆரம்ப தீவிரம் மங்கத்தொடங்கியது. டியூனிசியா பந்தை தங்கள் வசம் அதிகம் வைத்திருந்து கோல் அருகே வந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். இங்கிலாந்தின் தடுப்புவியூகத்துக்கு சற்றே நெருக்கடி ஏற்பட்டது. இப்படிப்பட்ட தருணத்தில் தான் டியூனிசியா வலது புறம் பந்தை வேகமாகக் கொண்டு சென்றது அங்கிருந்து பந்து பெனால்டி பகுதிக்குள் உதைக்கப்பட்டது அங்கு இங்கிலாந்து வீரர் கைல் வாக்கர் டியூனிசிய வீரர் ஃபாக்ரெடைன் பென் யூஸுப்பை முறையற்ற விதத்தில் கையால் தடுத்தார், சுத்தமாக அவரை மறித்தார், அது ஃபவுல்தான் என்று முடிவெடுக்கப்பட்டு டியூனிசியாவுக்கு பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது.

 

இங்கிலாந்து கோல் கீப்பர் ஜோர்டான் பிக்ஃபோர்ட் தயாரானார், டியூனிசியாவின் ஃபெர்ஜானி சாஸியும் கோல் அடிக்கத் தயாரானார், வலது மூலைக்குத் தாழ்வாக ஒரு கர்லிங் உதையை அவர் உதைக்க பிக்போர்ட் டைவ் அடித்தும் பயனில்லை. டியுனிசியா 33 வது நிமிடத்தில் சமன் செய்தது.

 

இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து 4-5 கோல்களையாவது அடித்திருக்க வேண்டும். டியூனிசியா சமன் செய்வதற்கு முன்பாக இங்கிலாந்து முழு ஆதிக்கம் செலுத்தியது.

 

தொடக்க அரைமணி நேர இங்கிலாந்தின் ஆட்டத்திலேயே 4-5 கோல்களை அடிக்க வாய்ப்பிருந்தும் இங்கிலாந்து சொதப்பியது வரவிருக்கும் போட்டிகளில் பெரிய தலைவலியாக அந்த அணிக்கு இருக்கும்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top