தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர்

 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார்.

 

சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது. 1998-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது.

 

எத்தனை தீர்ப்புகள் வழங்கினாலும் கார்ப்பரேட் ஆலைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றுச் சூழல் விதிகளை குறைத்து கொண்டே வந்தனர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியாவது கிடைத்தது.

தற்போது நடக்கும் ஆட்சிக்கு மக்கள் பிரச்சனை கூட தெரியவில்லை. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய நிறுவனம் இல்லாத வேதாந்தா குழுமம் நம்பிக்கை தன்மையை இழந்துவிட்டது.

நர்மதா அணை கட்டும் பணியின் போது மக்களின் பிரச்சனையை புரியாமல் மோடி நடந்தது போல் இங்கு இப்போது நடந்துள்ளது. நடந்த வன்முறையை காரணம் காட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top