மத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு

தமிழகத்தின் பள்ளிகளில் மத்திய அரசுக்கு கீழ் இயங்கும் பள்ளிகளில்  கேந்திரிய வித்தியாலயா பள்ளியும் ஒன்று. கேந்திரிய வித்தியாலய பள்ளிக்கும் சிபிஎஸ்இ சார்பு தனியார் பள்ளிகளுக்கும் ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில் இதுவரை இருந்துவந்த முறையை திடீரென மாற்றியிருக்கிறது மோடி அரசு.

 

இதுவரை ஆசிரியர்களின் தகுதித்தேர்வில் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் இருந்துவந்தன. இப்போது இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற மொழிகளை (தமிழ், தெலுங்கு, வங்காளி உள்பட 16 மாநில மொழிகளையும்) நீக்கியிருக்கிறது மத்திய அரசு.

 

மத்திய அரசுப் பணிகளை இந்தி பேசும் பிராமணர்களுக்கு மட்டுமே கிடைக்கச்செய்வதில்  மோடி அரசு திட்டமிட்டு வேலை செய்து வருகிறது மத்திய அரசு பணிகள் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு குறிப்பாக பிராமணர் அல்லாதவர்க்கு இல்லை என்கிற போது  நமது வரியை மட்டும் ஏன் அவர்களுக்கு செலுத்தவேண்டும் என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்!

 

இந்தி பேசுபவர்களுக்கும் சமஸ்கிருதம் படிக்கும் பார்ப்பனர்களுக்கும் மட்டுமே இந்தியா சொந்தமா? நாங்கள் என்ன அடிமைகளா? என பொங்கி எழுகிறார்கள் ஆசிரியர்கள்.

 

மாநில அதிகாரத்தை மட்டுமல்ல,ஒவ்வொரு தேசிய இனங்களின் பண்பாட்டையும் மொழியையும் பறித்து ஹிந்தியையும் சமஸ்கிருதத்தையும் அதிகாரமிக்க மொழியாக்குவதே மோடியின் ஆர்எஸ்எஸ் சின் திட்டம்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top