“கெஜ்ரிவால் ஒரு நக்சலைட்” – பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கடும் தாக்கு

 

 

டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

இதைத்தொடர்ந்து, துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ம் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார். ஆனால் அவரை சந்திக்க பைஜால் மறுத்து விட்டார்.

 

இதையடுத்து, கெஜ்ரிவால் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல் மந்திரி மணீஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்த்ர ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏழாவது நாளாக அவர்கள் கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதற்கிடையே, பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி, ஆந்திரா முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் நேற்று டெல்லி வந்தனர்.

 

அரவிந்த கெஜ்ரிவாலை சந்திக்க கவர்னர் மாளிகையிடம் அனுமதி கேட்டனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால், நேற்று மாலை அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்ற அவர்கள், அவரது மனைவியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

 

இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நக்சலைட் மற்றும் 420 (மோசடி பேர்வழி) ஆவார். பிறகு ஏன் நான்கு மாநில முதல்வர்களும் (மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு) அவருக்கு ஆதரவளிக்க வேண்டும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி  இது மாதிரி பல தலைவர்களை இழிவாக தொடர்ந்து பேசுவது வாடிக்கையாக போய்விட்டது.அவரை பாஜக தலைவர்கள் யாரும் கண்டிப்பதில்லை.மாறாக ஊக்குவிக்கிறார்கள். ஒரு அரசியல் ரௌடியைபோல  செயல்படுவது அருவருப்பாக இருக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top