சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்த குமாரசாமி; காவிரி ஆணையம் பயனற்றுவிடும்

 

சுப்ரீம் கோர்ட்  தீர்ப்பை அவமதித்து போதுமான அளவு மழை பெய்யாவிட்டால் காவிரி ஆணையம் பயனற்றுவிடும் என்று கர்நாடக முதல்- மந்திரி குமாரசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி மத்திய அரசு காவிரி ஆணையம் அமைக்க ஒப்புக் கொண்டது. ஆனால் குழு அமைக்க கர்நாடக அரசு இன்னும் பிரதிநிதியை நியமிக்காமல் காலம் தாழ்த்துகிறது.

 

இந்த நிலையில், மதுரை வந்த கர்நாடக முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கர்நாடகா பிரதிநிதிகள் நியமிக்காதது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

 

அதற்கு பதில் அளித்த அவர், ‘‘காவிரி ஆணைய குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்காதது இரண்டாம் பட்சம் தான். ஆனால் போதுமான அளவு மழை பெய்யாவிட்டால் காவிரி ஆணையத்தில் யாருக்கும் பயனில்லாமல் போய்விடும்.

 

இதுவே மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை காட்ட பலமான காரணமாகிவிடும். தற்போது நன்றாக மழை பெய்கிறது. எனவே கடந்த 14-ந் தேதி முதல் கபினி அணையில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விடுகிறது.

 

போதுமான அளவு மழை பெய்தால், தண்ணீர் திறந்து விடுவதில் அரசு நிர்வாகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top