கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான ஜெய்நகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2,889 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.

கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூர், ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என். விஜயகுமார் மாரடைப்பால் இறந்தார். இதையடுத்து இந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு கடந்த ஜூன் 11ஆம் தேதி நடந்தது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன.

காங்கிரஸ் சார்பில் இந்தத் தொகுதியில் கர்நாடகா முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜக சார்பில், இறந்த பாஜக வேட்பாளர் விஜயகுமாரின் சகோதரர் பிரஹலாத் பாபு போட்டியிட்டார்.

வாக்குகள் இன்று 16 ரவுண்ட்டுகள் எண்ணப்பட்டன. இறுதியில் பாஜக வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா 2,889 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இவரது வெற்றியை காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top