முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிறுவனை  பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு இருதயம் பலவீனமாக இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சிறுவனை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரவீனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மூளைச்சாவு அடைந்த 25 வயது வாலிபரிடம் இருந்து இருதயம் பெறப்பட்டு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது. கடந்த மாதம் 24-ந் தேதி பிரவீனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை டாக்டர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் 4மணி நேரத்தில் வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இந்தியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top