வேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடியில்    துப்பாக்கி  சூட்டில்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தினரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்    தூத்துக்குடிக்கு சென்ற பொழுது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர் மக்களை சந்திப்பதை தடுக்க நினைத்தது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டதின் பொது

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை (என்.எல்.சி.யை) தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த ஏப்ரல் 10-ந்தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து நெய்வேலி அனல் மின்நிலையம் போலீசார் வேல்முருகன் உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் மீது இரு பிரிவினர்களிடையே மோதலை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

அதேபோல, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 1-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடியை சிலர் தாக்கினர்.

இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் உள்பட பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த இரு வழக்குகளில் வேல்முருகன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

 

அவர் சார்பில் பிணை  கேட்டு உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திலும்     கடலூர் நீதிமன்றத்திலும்   தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதையடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில்   வேல்முருகன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, ‘பிணை மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி நெய்வேலி அனல்மின் நிலையம் காவல் ஆய்வாளர் , உளுந்தூர்பேட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு  உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top