பெ.மணியரசன் தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம்!

தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தவாக கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது நேற்று தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து உள்ளனர்.

ஆர்  முத்தரசன்

நேற்று இரவு (10.06.2018) தஞ்சாவூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ரயிலடிக்கு சென்று கொண்டிருந்த தமிழ் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் திட்டமிட்டு தாக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த பெ.மணியரசனை பெரும் விபத்தில் சிக்க வைத்து கொலை செய்யும் சதித்திட்டம் வகுத்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. இந்த வன்செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

படுகாயம் அடைந்த பெ.மணியரசன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் சம்பவம் குறித்து விசாரித்த போது, தமிழ்நாட்டில் கருத்துரிமையை பறிக்கும் வன்முறை கும்பல் சுதந்திரமாக செயல்பட்டு, ஊக்கம் பெற்று வருகிறது. இது விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். ’பெ.மணியரசனை தாக்கிய குற்றிவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் தப்பிவிடாமல் தண்டிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்’.

அண்மை காலமாக அதிகரித்து வரும் கருத்துரிமை பறிப்பு வன்செயல்கள் குறித்து மாநில அரசு வாய்பொத்தி நிற்பதும். காவல்துறை வன்முறையாளர்களுக்கு ஆதரவாகவும், அடிப்படை உரிமைகiளுக்கு போராடி வருபவர்களை ‘சமூகவிரோதிகளாக’ சித்தரிப்பதும் அரசியல் அமைப்பு சட்டத்தை அப்பட்டமாக மீறிய செயலாகும். தமிழ்நாடு அரச மற்றும் காவல்துறையின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு போராட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.

 

மே பதினேழு  இயக்கம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் திரு.பெ.மணியரசன் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பலை உடனே கைது செய்! – மே பதினேழு இயக்கம்

தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த மணியரசன் அவர்களின் மீதும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தோழரின் மீதும் மர்ம கும்பல் தாக்குதலை நடத்திவிட்டு, அவர்களிடம் இருந்த கைப்பையினையும் பிடுங்கியுள்ளனர்.

இதில் கீழே விழுந்த தோழர் மணியரசன் அவர்களுக்கு கை மற்றும் கால்களில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோழர் மணியரசன் அவர்களைத் தாக்கிய கும்பலை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு மற்றும் காவல்துறையினை மே பதினேழு இயக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top