தென் மேற்கு பருவமழை அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

கோடை வெயிலில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கிய நிலையில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது. தென்மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், நமது முக்கிய அணைகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, மழை நீர் அணைகளுக்கு உருண்டோடி வந்து நீர்மட்டத்தைக் கணிசமாக உயர்த்தி விடும்.

அணைகளின் நீர்மட்டம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் இன்று சிறப்புப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதாவது, கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால் தென்மேற்குப் பருவ மழையின் துவக்கமே வெகு சிறப்பாக உள்ளது.

மழை மற்றும் அணைகளின் நீர்வரத்து நிலவரம்
1. கடந்த 36 மணி நேரத்தில் நீலகிரியின் அவலாஞ்சி பகுதியில் மட்டும் 600 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

  1. பாபநாசம் அணைக்கு நீர் வரத்து 6,700 கன அடியாக உயர்ந்துள்ளது. பெரியார் அணையின் நீர்வரத்து 7,500 கன அடியாவும், சோலையாறு அணையின் நீர்வரத்து 5,500 கன அடியாக உயர்ந்துள்ளது.
  2. பரம்பிக்குளம் அணையின் நீர்வரத்து 1,800 கன அடியாக உள்ளது. (ஒரு வேளை சோலையாறு அணையின் நீர்மட்டம் முழுவதும் நிரம்பினால், அங்கிருந்தும் தண்ணீர் பரம்பிக்குளத்துக்குத் திருப்பிவிடப்படும் என்பதால், நீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.)
  3. பில்லூர் அணைக்கு 9,400 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. பெருஞ்சாணி மற்றும் சித்தாறு இரண்டும் விரைவில் முழுக் கொள்ளளவை எட்டிவிடும் நிலையில் உள்ளன.

காவிரியின் பிறப்பிடமான குடகு பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. எனினும் கேஆர்எஸ் அணைக்கு நீர் வரத்து குறைவாகவே உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top