ரஜினிகாந்துக்கு எதிராக டிஜிபி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

 

 

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை ஆதரவளிக்கும் ரஜினிகாந்த்தின் பேச்சு நாட்டில் மக்களிடையே பெரும் சலசலப்பை உண்டுபண்ணியிருக்கிறது

 

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ரஜினிகாந்த் மீது தேவராஜ் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி இருப்பதாக ரஜினி கூறி உள்ளார். இதுபற்றி அவரிடம் போலீஸார் விசாரிக்க வேண்டும். விசாரணையில் அதுபோன்று எதுவும் இல்லை என்பது தெரியவந்தால் பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதேபோல், வழக்கறிஞர் ச.சுரேஷ் குமார் என்பவர் டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில், “சிபிசிஐடி போலீஸாரின் விசாரணையை திசை திருப்பும் வகையில் கருத்துகளை தெரிவிக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top