வேல்முருகனை தேசதுரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து பாண்டிச்சேரி ஜெகன் தீக்குளிப்பு

 

 

வேல்முருகனை தேச துரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் பாண்டிச்சேரியை சேர்ந்த தோழர் ஜெகன் என்பவர் தீக்குளித்தார்.உடனடியாக கட்சியில் தோழர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.மிக மோசமான கட்டத்தில் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

 

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடந்தது. அதில் 13 பேர் கொல்லப்பட்டனர். தமிழக அரசின் இந்த பயங்கரவாதப் போக்கை   கண்டிக்கப்போன தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

 

வேல்முருகன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வைகோ கூறியதை ஏற்று அவர் இரு நாட்களுக்கு பிறகு கைவிட்டார். இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேல்முருகன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இதையடுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் பினைக்கான மனு தாக்கல் செய்யப்பட  நிலையில் திடீரென நெய்வேலி போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தனர். காவிரி வாரிய விவகாரத்தில் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த வேல்முருகன் மீது  நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு இருப்பதாகவும் கூறி  கைது செய்தனர்.

சாதரணமாக கைது செய்யப்பட்டு பின் பிணை கிடைத்துவிடும் என்று தெரிந்ததும்.பழைய வழக்கிற்கு  புதிதாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்து,தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு மீண்டும் புழலில் அடைக்கப்பட்டார்

 

 

தமிழக அரசு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை திட்டமிட்டு கைது செய்ததை கண்டித்து பல அரசியல் இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும்  இந்த வேளையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் ஒருவர் திடீரென தீக்குளித்திருப்பது மிகுந்த வேதனையை கொடுத்து இருக்கிறது என்று தலைவர்கள் கூறுகிறார்கள்

 

வேல்முருகனை தேச துரோக வழக்கில் கைது செய்ததை கண்டித்து  பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தோழர் ஜெகன் என்பவர் தீக்குளித்து மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top