தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் இன்று தேச துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

 

 

ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த வேல்முருகன் இன்று தேச துரோக வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

 

இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் தூத்துக்குடி சென்றதற்காக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பிறகு சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது

 

வேல்முருகன் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வைகோ கூறியதை ஏற்று அவர் இரு நாட்களுக்கு பிறகு கைவிட்டார். இந்நிலையில் உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேல்முருகன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக பிரச்சினைக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

இதையடுத்து நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் பினைக்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.அடுத்த வாயிதா 4-6-18 அன்று போடப்பட்டிருந்தது.

 

இந்தநிலையில்  இன்று திடீரென நெய்வேலி போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்தனர். காவிரி வாரிய விவகாரத்தில் நெய்வேலி அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்த வேல்முருகன் மீது  நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு இருப்பதாகவும் கூறி  கைது செய்தனர்.

 

 

ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி சென்று போராடிய மக்களுக்கு எதிராக பேட்டி கொடுத்தது, மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது.சட்டசபை நடக்கிற இந்த நேரத்தில் பெரும் போராட்டங்கள் எதுவும் வெடித்தால் ஆளும் கட்சிக்கு சிக்கலாக இருக்கும், அதே நேரத்தில் போராடுபவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு ஒரே வழி உள்ளே இருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்வது என முடிவு எடுத்துள்ளதாக செய்தி வருகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top