ஜெருசலேமை ஆக்கிரமித்து உள்ள இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலைப்போராளிகள் குண்டு வீச்சு

 

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் தொடர்ந்து ராணுவம் தாக்குதல் நடத்தியதால்.பாலஸ்தீன விடுதலை இயக்க போராளிகள் பதிலடியாக பீரங்கி குண்டுகளை இஸ்ரேல் மீது வீசினார்கள்.

 

இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகள் வீசப்பட்டன. இதில் பெரும்பாலான குண்டுகள் இடைமறித்து அழிக்கப்பட்டன. சில குண்டுகள் இஸ்ரேல் பகுதிக்குள் விழுந்து வெடித்தன. ஒரு குண்டு பள்ளி வளாகத்தில் விழுந்தது. அப்போது மாணவர்கள் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது. 2014 போருக்குப் பிறகு இஸ்ரேல் மீது பாலஸ்தீன விடுதலை போராட்ட போராளிகள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்துள்ள அமெரிக்கா, அந்த நகரில் தனது தூதரகத்தை அண்மையில் திறந்தது. ஜெருசலேம் நகரை சொந்தம் கொண்டாடும் பாலஸ்தீனர்கள் இதை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனியர் மீது தாக்குதல் நடத்தியதில்  கடந்த மார்ச் 30 முதல் இதுவரை 121 பாலஸ்தீனர்கள் பலியாகி உள்ளனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top