ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை நீக்கி வீரசாவர்க்கர் படம் போடவேண்டும் – இந்து மகா சபை கோரிக்கை

 

ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்தில் சிலர் கிறுக்கி வைக்கின்றனர். இது தேசப்பிதாவுக்கு ஏற்படும் அவமதிப்பு செயலாக உள்ளது. எனவே ரூபாய் நோட்டுகளில் உள்ள மகாத்மா காந்தி படத்தை நீக்க மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவை தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு அபராதமும் விதித்தது.

இந்நிலையில் அகில பாரதிய இந்து மகா சபை தலைவர் சுவாமி சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், ரூபாய் நோட்டுகளில் இடம் பெற்றுள்ள மகாத்மா காந்தி படத்தை நீக்க வேண்டும். அதற்கு பதிலாக, வீரசாவர்க்கரின் படத்தை ரூபாய் நோட்டுகளில் இடம்பெற செய்ய வேண்டும். மேலும் வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top