பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி

 

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 2,450 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி

 

கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து தான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகள் போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத் தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெற்றது.

 

8 லட்சத்து 63 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய பிளஸ் 1 பொதுத்தேர்வில் 91.3% பேர் மொத்தம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.4% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 94.6% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2,724 அரசுப் பள்ளிகளில் 188 அரசுப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

 

2,729 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பிளஸ் 1 பொதுத்தேர்வு எழுதினர். இதில் 2,450 பேர் தேர்ச்சி பெற்றனர்.

 

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் ரேங்க் பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு நிறுத்தப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23-ம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோல, இன்று வெளியான பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top