காஷ்மீரில் இந்திய ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு காஸ்மீர் விடுதலை போராளி ஒருவர் மரணம்

 

 

காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருக்கும் விடுதலை இயக்கங்களையும் தலைவர்களையும் இந்திய இராணுவம் கடுமையான ஒடுக்குதலுக்கு ஆளாக்குகிறது

 

நேற்று, புல்வாமா மாவட்டத்தில் உள்ள ககபோரா  [Kakapora] பகுதியில் இரவு இந்திய இராணுவம் காஷ்மீரின் விடுதலைக்காக மிக தீவிரமாக போராடி கொண்டிருக்கும் தோழர்களின் மீது கடுமையான துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியுள்ளது,

 

இந்திய இராணுவத்தின் இந்த அயோக்கியத்தனமான தாக்குதலில் காஷ்மீரின் அப்பாவி பொதுமக்களில் ஒருவரான பிலால் அகமது [Bilal Ahmad Ganai ]என்பவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.


இறந்த உடலை ஜம்மு காஷ்மீர் இராணுவம் கைப்பற்றி குடும்பத்தாரிடம் தர மறுத்துள்ளது,உடலை ஒப்படைக்க கோரி போராட்டம் நடத்திய மக்களின் மீதும் கடுமையான கண்ணீர் புகை குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

 

பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு உடல் பெறப்பட்டு, கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் ஒன்றுகூடி பிலால் அகமதுவின் [Bilal Ahmad Ganai] இறுதி ஊரவலம் நடத்தப்பட்டது.

 

இதனை தொடர்ந்து புல்வாமா மாவட்டத்தில் இணைய சேவை தடை செய்யப்பட்டு, இரயில் சேவையும் தடை செய்யப்பட்டது.

 

சோபியன் மாவட்டத்தில் உள்ள சுகன் [Sugan ] கிராமத்திற்குள் இன்று அத்துமீறி நுழைந்த இந்திய இராணுவம், கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவு, ஜன்னல் மற்றும் வீட்டிற்கு வெளியே இருந்த வாகனங்கள் என அனைத்தையும்  அடித்து உடைத்துள்ளது .

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top