கிம் ஜாங் அன் யுடன் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் விருப்பம்; அதிகாரிகள் வடகொரியா விரைந்தனர்

 

 

வடகொரியா அதிபருடன் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தாமல் விடமாட்டார் போலிருக்கிறது.  இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளார்

 

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் யுடன் அமெரிக்கா சமரச போக்கை மேற்கொண்டு வருகிறது.  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று கிம் ஜாங் அன் அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

 

 

இதற்கு முதலில் ஒப்புக்கொண்டார் டிரம்ப்.இதற்கிடையில்  தென்கொரியா உடன் ராணுவ பயிற்சியை மேற்கொண்டது  அமெரிக்கா கிம் ஜாங் அன் அமெரிக்காவின் விளையாட்டை புரிந்து கொண்டு பேச்சு வார்த்தைக்கு மறுத்தார்.

 

இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார்.தென்கொரியா மீண்டும் அமெரிக்காயுடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு பண்ணுகிறது.கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை மீண்டும் டிரம்ப் உறுதிப்படுத்தினார்.

 

இதைத்தொடர்ந்து, வடகொரியா அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதற்காக அமெரிக்க அதிகாரிகளை பியாங்யாங் நகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

பிரமாதமான வளங்களை கொண்ட வடகொரியா பொருளாதாரம் மற்றும் நிதியமைப்பில் ஒருநாள் உயர்ந்த நாளாக உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top