ஐபிஎல் 2018 இறுதிப் போட்டி; சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி; ஷேன் வாட்ஸன் அதிரடி சதம்

11-வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ள நிலையில், இறுதிஆட்டத்தில் பட்டையை கிளப்பிய ஷேன் வாட்ஸனுக்கு பாராட்டுகள் வந்தவண்ணம் இருக்கிறது .

 

11-வது ஐபிஎல் சீசன் போட்டி கடந்த 50- நாட்களுக்கும் மேலாக நடந்தது. சூதாட்ட சர்ச்சை காரணமாக 2 ஆண்டுகள் தடைமுடிந்து, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் இடம் பெற்று இருந்ததால், முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே இந்த முறை பட்டம் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 

அதற்கு ஏற்றார்போல், லீக் ஆட்டங்களிலும், ப்ளே ஆப் சுற்றிலும் அற்புதமான ஆட்டங்களை வெளிப்படுத்திய சென்னை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. மும்பையில் நேற்று நடந்த இறுதிஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்தது. 179 ரன்களைத் துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாட்ஸனின் அபாராமான சதத்தால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை அடைந்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

 

இறுதி ஆட்டத்தில் தொடக்கத்தில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்திய வாட்ஸன், முதல் 10 பந்துகளைச் சந்தித்து ஒரு ரன்னை எடுத்தார், ஆனால், அடுத்த 41 பந்துகளில் காட்டடி அடித்து சதத்தை நிறைவு செய்தார். இவரின் மிரட்டலான பேட்டிங் சென்னை அணிக்கு எளிதான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது.

 

15 போட்டிகளில் விளையாடிய வாட்ஸன் 2 சதம், 2 அரைசதம் உள்ளிட்ட 555 ரன்கள் சேர்த்தார்.

 

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றியின் காரணம் வாட்ஸனின் அபாரமான விளாசல் விளையாட்டுதான் முதல் பத்து பந்தில் சுமாராக விளையாடி பிறகு வாட்ஸன் தன்னை நிலை நிறுத்திக்கொண்டதற்கு காரணம்

சந்தீப் சர்மா, சித்தார்த் கவுல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் சன் ரைசர்ஸின் வெற்றிகளில் அபாரமாக வீசியவர்கள் ஆனால் நேற்று இருவரும் மோசமாக வீச, ஷேன் வாட்சனுக்கு அவருக்கு வாகான இடங்களில் வீசினர். இதனால் இருவரும் 7 ஓவர்களில் 95 ரன்கள் விளாசப்பட்டனர்.

 

ஆட்டத்தின் 11 ஓவர்கள் முடிந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்குத் தேவை 9 ஓவர்களில் 84 ரன்கள். அப்போது ரஷீத் கானுக்குத் தொடர்ந்து கொடுத்து நெருக்கடி கொடுத்து விக்கெட்டுகளைக் கைப்பற்ற முயற்சி செய்திருக்க வேண்டும், ஆனால் அவர் ரஷீத் கானை பந்து வீச்சிலிருந்து அகற்றி விட்டு பிராத்வெய்ட், சந்தீப் சர்மா ஆகியோருக்கு 3 ஓவர்களை நடுவில் கொடுத்தார். 12வது ஓவரில் பிராத்வெய்ட் 9 ரன்களைக் கொடுத்தார், 13வது ஓவரில் சந்தீப் சர்மா ஹாட்ரிக் சிக்சர்களுடன் 2 பவுண்டரிகள் என்று 27 ரன்களைக் கொடுத்தார். மீண்டும் பிராத்வெய்ட்டிடமே 14வது ஓவரைக் கொடுக்க ரெய்னா விக்கெட்டை அவர் வீழ்த்தினாலும் அதே ஓவரில் வாட்சனுக்கு வாகாக 2 பந்துகளை வீச ஒன்றுபவுண்டரி ஒன்று சிக்ஸர்.

 

இந்த ஓவரில் 14 ரன்கள் வந்தது, ஆகமொத்தம் 12-14 ஓவர்களில் 50 ரன்களை சன் ரைசர்ஸ் கொடுக்க அப்போதே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு வெகு அருகில் வந்தது.

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top