மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் அதிக இடங்களை அரசு சாரா டாக்டர்கள் அபகரித்தனர்

மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு, அரசு டாக்டர்கள் குறைந்த இடங்களையும். அரசு சாரா தனியார் டாக்டர்கள் அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறார்கள்

 

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு, பட்டயமேற்படிப்பு (டிப்ளமோ) மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பு (எம்டிஎஸ்) ஆகிய இடங்களுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலை அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது. முதல்கட்ட கலந்தாய்வு நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

 

இந்தக் கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கான 1,175 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இதில் அரசு டாக்டர்கள் 727 இடங்களையும், அரசு சாரா டாக்டர்கள் 448 இடங்களையும் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

 

கடந்த ஆண்டு நடந்த மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் 98 சதவீத இடங்களை அரசு டாக்டர்களும், 2 சதவீத இடங்களை அரசு சாரா டாக்டர்களும் எடுத்திருந்தனர். இந்த முறை நீட் தேர்வு மற்றும் மத்திய அரசு எடுத்துக்கொண்ட  மாநில அரசின் 50% மருத்தவ இடங்கள்  ஆகியவற்றால் தனியார் மருத்துவர்கள் அதிக இடங்களை அபகரித்துக்கொண்டார்கள்

 

மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கு கடந்த ஆண்டு 1,500 மதிப்பெண்களுக்கு நடந்த நீட் தேர்வு, இந்த ஆண்டு 1,200 மதிப்பெண்களுக்கு நடந்தது. இதேபோல் கடந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் இல்லை. ஆனால், இந்த ஆண்டு நெகட்டிவ் மதிப்பெண் உள்ளது. இதைவிட முக்கியமாக, கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது.

 

டெங்கு ஒழிப்புப் பணியில் ஈடுபட்டதால், நீட் தேர்வுக்கு சரியாக படிக்க முடியவில்லை. அதனால், நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்தது. இதனால்தான் அரசு டாக்டர்களால் அதிக இடங்களைப் பெற முடியவில்லை. ஆனால், அரசு சாரா டாக்டர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு படிக்க அதிக நேரம் இருக்கிறது.

 

தனியார் பயிற்சி மையம் சென்று நீட் தேர்வுக்குப் படிக்கின்றனர். அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிபெண்கள் வழங்கு முறை வேண்டாம். முன்பு இருந்ததைப் போலவே மருத்துவப் பட்டமேற்படிப்புகளில் அரசு இடங்களில் 50 சதவீதத்தை அரசு டாக்டர்களுக்கு திரும்பக் கொண்டு வருவதற்கான தனி சட்டத்தை, தமிழக சட்டப்பேரவையில் இயற்ற வேண்டும்.என்று தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க மாநிலத் தலைவர் கதிர்வேல், பொருளாளர் டாக்டர் கோபிநாத் கூறினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top