மக்களின் கேள்விகளை எதிர்கொள்ளமுடியாமல்ஆலோசனை கூட்டம் ரத்து; அவசரமாக சென்ற ஓ.பன்னீர்செல்வம்

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும், பலர் காயமடைந்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று (திங்கள்கிழமை) துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்தார். அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோரும் அவர் உடன் வந்திருந்தனர் .

 

சட்டமன்ற கூட்டம் தொடங்க இருக்கிற நிலையில்.தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி  சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பும்.ஏன் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களை போய் பார்க்கவில்லை என்று கேள்வி வரும் இதையெல்லாம் சமாளிப்பதற்கு.அவசர, அவசரமாக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி  வந்தார்

 

தூத்துக்குடிக்கு வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்றரை மணி நேரம் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நேரம் செலவிட்டார். இதன்பிறகு 10 நிமிடங்கள் மட்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேரம் செலவிட்டார். அங்கு ஒரு ஆய்வு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால்,இருக்க பிடிக்காமல் பத்து நிமிடங்களிலேயே கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பி விமானத்தில் சென்னை கிளம்பினார் பன்னீர்செல்வம்.
அதுபோல, பாதிக்கப்பட்ட இடங்களுக்கும் நேரில் சென்று ஆறுதல் கூறவில்லை.  போலீசாரின் தடியடி, துப்பாக்கி சூட்டால் தூத்துக்குடியின், திரேஸ்புரம், அண்ணாநகர், பிரையன்ட் நகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.அந்த இடங்களுக்கு செல்லாமல் துணை முதல்வர் திரும்பி செல்வது கண்டிக்கத்தக்கது என்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

 

 

போலீஸ் லத்தியால் அடித்த  தழும்பு சிறுவர்கள் உடல்களில் உள்ளது. மக்களை பார்க்கவில்லை, போலீசாரால் சேதப்படுத்தப்பட்ட வீடுகள், அம்மக்களை சந்தித்து விவரம் கேட்கவில்லை, ஆறுதலும் கூறவில்லை. போராட்டத்தின்போது, மர்மமாக எரிந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிடவில்லை

 

நேற்று, அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டபோது, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களும், அவர்களின் உறவினர்களும், அமைச்சரை கேள்விகளால் துளைத்தனர். அவரால் பதிலளிக்க முடியாமல் திணறினார். இன்றும் அதே நிலை பன்னீர் செல்வத்திற்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரால் பதில் சொல்ல முடியாது என்பதை அறிந்தே முதலிலேயே மீடியாக்களை இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை.

 

இதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், “தூத்துக்குடியில் நடைபெற்ற இத்துயர சம்பவம் அனைவரது நெஞ்சையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. தமிழக அரசின் சார்பாக ஆழ்ந்த வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறோம். அவர்கள் உடல் நலம் தேறி வருவார்கள் என தெரிவிக்கிறேன்.என்றும் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்ற பொதுமக்களின் முக்கிய கோரிக்கைக்கு ஏற்ப, தற்போது அந்த ஆலை மூடப்பட்டிருக்கிறது. நிரந்தரமாக மூடுவதற்குரிய நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் எடுக்கும். என்றும் தெரிவித்து கிளம்பிவிட்டார்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top