ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டமும் மோடி அரசு செய்த கொலையும்.

 

 

ஸ்டெர்லைட் எனும் நச்சு ஆலையை என்று தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நிறுவினார்களோ அன்றிலிருந்து அந்த ஆலைக்து எதிரான போராட்டம் நடந்துகொண்டே இருக்கிறது. அதில் மிகச்சமீப காலமாக அதாவது இந்த ஆலையை விரிவாக்கம் செய்யபோகிறோமென்று அறிவித்ததிலிருந்து தூத்துக்குடியை சுற்றியுள்ள மக்கள் மிகப்பெரிய போராட்டங்களை தொடர்ந்து நடத்திக்கொண்டுவருகிறார்கள். இதனடிப்படையில் தான் கடந்த மார்ச் மாதம் 24,2018 ஆம் தேதி பல்லாயிரக்காண மக்கள் திரண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக மிகப்பெரிய பேரணியை நடத்தினார்கள். அடுத்து அதேபோல ஒரு பேரணியை மே 22,2018 நடத்தி மாவட்ட ஆட்சி தலைவரை சந்திக்க மக்கள் முடிவு செய்திருந்தினர். அதன்படி நேற்று முந்தினம் பல்லாயிரம் மக்கள் பேரணி சென்று கொண்டிருந்தபோது காவல்துறை திட்டமிட்டு ஒரு கலவரத்தை உண்டாக்கி தூப்பாக்கிச்சூடு நடத்தி 12உயிர்களை எடுத்திருக்கிறது. அதோடு பலநூறு பேர்களை அடித்து கை, கால், மண்டைகளை உடைத்தெறிந்திருக்கிறது. காரணம் கேட்டதற்கு மக்கள்  வன்முறையில் ஈடுபட்டார்களென்று ஒரு பச்சை பொய்யை அரசும் காவல்துறையும் சொல்கிறது. ஆனால் உண்மை வேறு.

 

 

அதாவது தற்போது திரண்ட கூட்டத்தை விட மார்ச்24ஆம் தேதி அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடினார்கள். ஆனால் ஒரு வன்முறையும் அப்போது நடக்கவில்லை. ஆனால் அதில் பாதியளவு மக்களே இப்போது மே 22ஆம் தேதி கூடியிருக்கிறார்கள் இப்போது மட்டும் வன்முறை வெடித்திருக்கிறதென்றால் இந்த இடைப்பட்ட ஒரு மாதத்தில் என்ன நடந்திருக்கிறதென்று ஆராய்ந்தால் இந்த வன்முறைக்கு யார் காரணமென்பது எளிமையாக புரியும்.

 

 

கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோடி இங்கிலாந்துக்கு சென்றார்.அப்போது அவரை வரவேற்று இங்கிலாந்து பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் பெரிய பெரிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விளபரங்களை கொடுத்தது தூத்துக்குடியில் மக்களை கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்திக்கொண்டிருக்கும் அதே அனில் அகர்வால் தான்.

அதுமட்டுமல்ல அங்கு வந்த நரேந்திரமோடியை இந்தியாவில் தொழில் தொடங்குவது சம்பந்தமாக அனில் அகர்வால் சந்தித்து பேசியிருக்கிறார். இதை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தியாக போட்டிருக்கிறார். இந்த சமயத்தில் தமிழகத்தில் தூத்துக்குடியில் அனில் அகர்வாலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் திவிரமாக நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் மோடி,அகர்வால் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

 

இந்த சந்திப்புக்கு பிறகே தமிழக அரசின் போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதென்றால் இது எதோ ஏதேச்சையாக நடந்ததாக யாரும் நினைக்கமாட்டார்கள். அப்படியென்றால் தூத்துக்குடியில் நடந்த பச்சை படுகொலை என்பது இலண்டனில் பேசப்பட்டு, டெல்லியில் முடிவு செய்யப்பட்டு, தமிழகத்தில் தூத்துக்குடியில் நடந்தேறியிருக்கிறது என்பது தான் உண்மை.

 

 

மேலும், வேதாந்தாவின் அனில் அகர்வால் மற்றும் மோடி இடையேயான நெருக்கும் என்பது தற்போதைய லண்டன் பயணத்தின் போது மட்டும் நிகழ்ந்ததல்ல. மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அதாவது பிரதமர் வேட்பாளராக நிற்கும்போதே வெளிப்படையாக ’இந்தியர்களின் கண்கள் மோடியை தேடுகிறதென்று மோடிக்காக பிரச்சாரம் செய்தவர் தான் அனில் அகர்வால். அதோடு பிஜேபி அரசுக்கு எண்ணெற்ற கோடிகளை தேர்தல் செலவுக்காக என்று கொடுத்திருக்கிறார். உதாரணமாக

 

இது மட்டுமில்லை மோடியின் ’மேக்-இன்-இந்தியா’, தூய்மை இந்தியா போன்ற பல்வேறு திட்டங்களுக்கும் வேதாந்தா நிறுவனம் நிதியுதவியை அளித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் கங்கையை தூய்மைபடுத்தும் பணிக்காக ஆகும் செலவை அனில் அகர்வால் பொறுப்பெடுத்துக் கொள்கிறாரென்று பிஜேபியின் மூத்த அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். அதேபோல பிஜேபியின்  நிலக்கரி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர்களும் வேதாந்த குழுமத்துடன் அதிக நெருக்கத்துடன் இருப்பவர்களே. இதனால் தான் சமீபத்தில் இந்தியாவில் பல பகுதிகளில் புதிதாக ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயுவை எடுக்க வேதாந்த குழுமத்திற்கு இந்திய மோடி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

 

 

இப்படி தற்போதைய மோடி அரசும்வேதாந்தாவின் அனில் அகர்வால் குழுமமும் மிக நெருக்கமாக இருக்கீறது. இதனால் தான் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு எந்தவித சுற்றுச்சூழல் அனுமதியையும் கணக்கில் எடுக்காமல் மத்திய அரசு அவசரமாக அனுமதி அளித்தது. இப்படி மத்திய அரசு அனுமதி அளித்தும் மாநிலத்தில் நடக்கும் தொடர் மக்கள் போராட்டங்களால் மாநில அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. எனவே ஆலை தொடங்கப்படவேண்டுமென்றால் நச்சு ஆலைக்கெதிராக போராடும் மக்கள் போராட்டத்தை ஒடுக்க வேண்டுமென்று முடிவெடித்து மத்திய அரசு பெரும் கலவரத்தை நடத்தி போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களையும் மக்களையும் கொலை செய்திருக்கின்றது.

 

கொண்டல்சாமி

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top