தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தலைமை செயலகம் முற்றுகை!

 

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து வேல்முருகன் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் தலைமை செயலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். ஆயிரக்கணக்கானோர்  கைது செய்யப்பட்டு பின்பு விடுதலை செய்யப்பட்டார்கள்.

 

இன்று மாலை 4 மணி அளவில் பல்வேறு தமிழ் தேசிய அமைப்புகள்,திராவிட இயக்கங்கள் உட்பட தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே   பேரணியாக வந்தார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எதிராக முழக்கமிட்டு முதலமைச்சரை பதவி விலக கோரினார்கள். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது. .

“துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தொடர்புள்ள போலீசாரை கைது செய்ய வேண்டும். தமிழக அரசு கொள்கை முடிவெடுத்து ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும். காக்கா, குருவிகளை போல இனபடுகொலை செய்த காவலர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட வேண்டும். அறுக்கபட்ட தாலிகளுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தூத்துக்குடியில் இருந்து கமாண்டோ படைகளை வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு வேல்முருகன் பேசினார்.

இக்கூட்டத்தில், அரசியல் கட்சிகள், பெரியாரிய இயக்கங்கள், தமிழ் தேசிய அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், இளையோர் அமைப்புகள், சூழலியல் அமைப்புகள், விவசாய சங்கங்கள், ஆகியவற்றின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top