பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

bala-miskin‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மிஸ்கின் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார். படத்தை தயாரிப்பவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாலாதான்.

தற்போது சசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலா, தனது ‘பி ஸ்டுடியோ’ பேனர் மூலம் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு ‘பிசாசு’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கும் இசைஞானி இளையராஜாதான் இசையமைகிறார்.

“சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும்” படங்களுக்குப் பிறகு மிஷ்கின் இயக்கும் 7வது படம் இது. அதேசமயம், பாலா இதற்கு முன்பு மாயாவி, பரதேசி ஆகிய இரண்டு படங்களை தயாரித்துள்ளார். இது அவர் தயாரிக்கும் மூன்றாவது படம்.

படத்திற்கான நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்யும் பனி தற்போது நடைபெற்று வருகிறது. அமானுஷ்ய சக்தியை பின்னணியாக வைத்து உருவாக உள்ள இப்படத்தின் பூஜை வருகிற 14 -ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top