இந்தியாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது! முன்னாள் ஐ.ஏ.எஸ் ,ஐ.பி.எஸ் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

 

 

பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட மக்களை தங்களது நிர்வாக வசதிக்காக வெள்ளையர்கள் இந்தியா என்ற கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்தார்கள். அந்த உருவாக்கப்பட்ட இந்தியா என்ற நாட்டிற்கான விடுதலையை 1947இல் வெள்ளையர்கள் தங்களுடன் நெருக்கமாக இருந்த பார்ப்பனர்களிடம் கொடுத்துவிட்டு சென்றார்கள். அன்றிலிருந்து இந்த இந்திய ஒன்றியத்தை காக்க பார்ப்பனர்கள் அதிகாரமையங்களை உருவாக்கினார்கள். ஆனால் சமீப காலமாக இந்த அதிகாரமையங்களே இந்தியாவின் எதிர்காலம் நோக்கி கேள்விகனைகளை வைக்கிறார்கள். காரணம் 2014இல் ஆட்சியை கைப்பற்றிய பிற்போக்கு சிந்தனைக்கொண்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வார்ப்பான நரேந்திரமோடி பிரதமர் ஆனதிலிருந்து நடக்கும் சம்பவங்களை கணக்கில்கொண்டு சொல்கிறார்கள்.

 

 

மே 16,2018 அன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றிய  49 முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பிரதமருக்கு ஒரு போராட்ட முன்னெடுப்பு கடிதத்தை எழுதியிருந்தார்கள். அதில் ”இந்தியா தற்போது இருண்ட காலத்தில் இருக்கிறது. மக்கள் மிகுந்த அச்சவுணர்வுடன் வாழ்கிறார்கள். குறிப்பாக சிறுபாண்மை மக்கள் மிகுந்த பதட்டத்துடன் காலங்களை கடத்துகிறார்கள். இந்து மதத்தின் பேரால் தினம் தினம் தலித்துகள் முஸ்லீம்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக சமீபத்தில் காஷ்மீரிலும், உத்திரபிரதேச மாநிலம் ஊனாவிலும் சிறுமிகளை கற்பழித்துக்கொலை செய்தது இந்தியாவின் பன்முகத்தன்மையையே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புடையவர்கள் உங்களுடைய கட்சியை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் நீங்கள் காக்கும் மவுனம் இந்தியாவின் எதிர்காலத்தின் மீதே எங்களை போன்ற மக்கள் பணியில் இருந்தவர்களுக்கு அச்சத்தை வரவழைக்கிறதுஎன்று ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருந்தார்கள். மேலும் இதனை எல்லாம் நீங்கள் கூடியவிரைவில் தடுக்காவிடில் நாட்டின் மீது அக்கறைக்கொண்ட நாங்கள் போராட்டத்தை முன்னெடுப்பதை தவிர எங்களுக்கு வேறுவழியில்லை என்று சொல்லியிருந்தார்கள். https://thelogicalindian.com/awareness/former-civil-servants-write-to-pm-modi-on-kathua-unnao-rape/.

 

 

இதனை தொடர்ந்து மே12,2018 அன்று உத்திரபிரதேசம் மற்றும் அசாம் மாவட்டங்களின் டி.ஜி.பியாக பணிபுரிந்தவரும், தற்போதைய இந்திய காவல்துறை அகாடமியின் தலைவருமான பிரகாஷ் சிங். இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ”இந்திய  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகமோசமான பதட்டமான சூழலில் இருக்கிறது. மாற்று கருத்துடையவர்களை அழித்தொழிப்பு (கல்புர்க்கியிலிருந்து கவுரி லங்கேஷ் வரைசெய்வதும், இந்து மதம் என்ற பெயரிலும், பசு பாதுகாப்பது என்ற பெயரிலும் வலதுசாரி திவிரவாத சிந்தனைகள் உள்ளவர்கள் செய்யும் ஆட்டுழியங்களும் நாளுக்கு நாள் பெருகிவருவதும், மிகமுக்கியமாக இந்தியாவை கட்டி காக்கும் அரசியல்சாசனத்தை அடிப்படையாகக்கொண்ட நீதித்துறையில் அரசின் தலையீடு இருப்பதென்பதென்பதும் இந்தியாவின் எதிர்காலத்தின் மீது மிகுந்த அச்ச உணர்வை என்னை போன்ற மக்கள் நலன் சார்ந்த குடிமை பணிகளில் இருந்தவர்களுக்கே வருகிறது.” இதை எல்லாவற்றையும் விட மேற்கண்ட அராஜகங்களுக்கு எதிராக இந்திய நாட்டின் பிரதமர் என்ற முறையில் நீங்கள் காக்கும் மவுனம் தான் மிகப்பெரிய அச்சவுணர்வை ஏற்படுத்துகிறது. என்று இன்றைய அபாய நிலையை விளக்கி எழுதியிருந்தார். https://thewire.in/communalism/bjp-constitution-dalit-muslims-kathua-unnao-prakash-singh

 

இப்படி இந்திய ஒன்றியத்தின் அதிகாரவர்கங்களாக இருந்த முன்னாள் அரசாங்க அதிகாரிகளையே அச்சங்கொள்ள வைக்கக்கூடிய வகையிலே தான் நாட்டின் இன்றைய நிலை இருக்கிறது. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் இந்த இருண்ட காலத்தை மேலும் மேலும் மோசமாக்கக்கூடிய வகையிலேயே தான் மோடி அரசின் அன்றாட நடவடிக்கை இருக்கிறது. பெருகிவரும் இந்த பேராபத்தை தடுக்காவிடில் இந்தியாவின் எதிர்காலமே கேள்விக்குள்ளாகும் என்பதை தான் மேற்கண்ட முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ்  அதிகாரிகள் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் இந்த கடிதத்தின் வாயிலாக புரிந்துகொள்ள முடியும்.

 

கொண்டல்சாமி 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top