இடிந்தகரை பொதுமக்களால் வைராவி கிணறு அரசு டாஸ்க்மாக் அடித்து நொறுக்கப்பட்டது

 

 

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடக்கோரி நெல்லையிலும் போராட்டம் வெடித்துள்ளது. இதன்காரணமாக பொதுமக்கள் திரண்டு அரசுப்பேருந்தினை சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், அதனை மூட வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில், மோதல் வெடித்தது. தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, வாகனங்கள் தீவைத்து எரிப்பு, கல்வீச்சு போன்றவற்றுடன் துப்பாக்க சூடும் அரங்கேறியது.

 

இதில், துப்பாக்கிசூட்டில் ஒரு பெண் உட்பட பல  பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். ஆலைக்கு எதிராகவும் துப்பாக்கி சூட்டின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்தும் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெல்லையில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

மேலும், இடிந்தகரையில் பொதுமக்கள் ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து 200-க்கும் மேற்பட்டோர் இடிந்தகரையில் திரண்டுள்ளனர். அவ்வழியாக சென்ற அரசு பேருந்தினை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளதுடன், நெல்லை மாவட்டத்திலும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

வைராவி கிணறு பகுதியில் இருந்த அரசு டாஸ்க்மார்க் கடையை இடிந்தகரை பொதுமக்கள் அடித்து நொறுக்கி தரைமட்டம் ஆக்கினார்கள்.தமிழகமெங்கும் போராட்டம் பரவி வருகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top