இலங்கையில் கனமழை; 7 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

 

இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

இலங்கையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. மழையினால் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதுலா, கேகலா மற்றும் காலுதரா பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பபட்டுள்ளன. மழையினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

 

மழையினால் 170-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top