தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலுக்கு தமிழக அரசு தடை; மே பதினேழு இயக்கத்தினர் கைது

 

தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை ஆண்டுதோறும் மே பதினேழு இயக்கம் சென்னை மெரினா கடற்கையில் கண்ணகி சிலை பின்புறம் நடத்திவருகிறது.

 

கடந்த ஆண்டு தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தலை நடத்தும் போது தமிழக அரசு மே பதினேழு இயக்கம் ,தமிழர் விடியல் கட்சி, காஞ்சி மக்கள் மன்றம்,தந்தை பெரியார் திராவிட இயக்கம் போன்ற அமைப்பு தோழர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தது அதில் நான்கு பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து வழக்கு பதிவு செய்தது. இறந்த சொந்தங்களுக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏற்ற போனா போது குண்டர் சட்டத்தில் கைதா! என தமிழக அரசை ஜனநாயக சக்திகள் எல்லோரும் சேர்ந்து கேள்வி கேட்டார்கள்.

 

இந்த ஆண்டு இந்த அரசு மக்களின் துயரத்தை அறிந்து மெரினா கடற்கரையை ஒதுக்கி கொடுக்கும் என நினைத்தார்கள். ஆனால் தமிழகத்தில் இருப்பது மக்களாட்சி அல்ல இது முழுக்க மத்தியில் உள்ள பாஜக வின் பினாமியாக நடக்கும் ஆட்சி என தெரிந்ததும் மே பதினேழு இயக்கமும் ,மக்கள் இயக்கங்களும் கட்சிகளும் தடையை மீறி நடத்துவது என்று முடிவு எடுத்தார்கள்.

அடக்குமுறைகள் மூலமாக விடுதலைக் கனவினை ஒடுக்கி விட முடியாது. நினைவேந்தல் தமிழர்களின் பண்பாட்டு உரிமை. அதனை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி அரசு தமிழின விரோத அரசு என்பதை மீண்டும் ஒருமுறை நமக்கு சொல்லியிருக்கிறது. என முழக்கங்கள் இட்டப்படி நேற்று மாலை ஐந்து மணிக்கு மெரினா கடற்கரை கண்ணகி சிலைக்கு எதிர் புறம் சுமார் நான்காயிரம் மக்கள் ,இளைஞர்கள்,பெண்கள் ,குடும்பம்கள் என கூடினார்கள்.இனப்படுகொலைக்கு எதிரான முழக்கங்கள் போட்டார்கள் .

அனைவரையும் தடுத்து கைது செய்த எடப்பாடி அரசின் அடக்குமுறையை வன்மையாக கண்டித்து முழக்கங்கள் இட்டார்கள் மிகவும் நேர்த்தியாக ,ஒழுக்கமாக கூட்டம் வடிவமைக்கப்பட்டு ஒவ்வொருவராக வரிசையாக கைது ஆனார்கள்.இது குறித்து ஒரு போலீஸ் கூறும்போது “எங்களுக்கு வேலையே வைக்காமல் இவ்வளவு பெரிய கூட்டத்தில் இளைஞர்களே தங்களை ஒழுங்கு படுத்தி கைது ஆனது என் சர்வீஸில் இப்போதுதான் பார்கிறேன்” என்றார்.

நினைவேந்தல் நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எஸ்.டி.பி.ஐ கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வேணுகோபால், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீப், தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன் மற்றும் இளமாறன், தமிழர் விடுதலைக் கழகத்தின் தோழர் சுந்தரமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், மற்றும் பல்வேறு தோழர்களும் கலந்து கொண்டனர்.

 

.சர்வதேச சட்டங்களை மீறி எதேச்சதிகாரத்துடன் செயல்படும் சட்ட விரோத எடப்பாடி அரசும், அதன் எஜமானனாக செயல்படும் இந்திய பாரதிய ஜனதா கட்சி அரசும் மக்களால் அகற்றப்படும். காங்கிரஸ், பாஜக இரண்டும் தமிழின விரோத சக்திகளே என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் அரசியல் இயக்கமாக வலிமை பெறுவதே அச்சத்தினை கொடுக்கும். தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வினை தமிழர் கடலில் தான் மே பதினேழு இயக்கம் நடத்தும். தமிழர் கடலை நோக்கி ஒவ்வொரு ஆண்டும் வருவோம். தமிழர் கடலை மீட்டெடுப்போம். தமிழர் கடலில் நினைவேந்தலை நடத்துவோம்.என மே பதினேழு ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறினார்..

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top