இலங்கையில் தமிழினப் படுகொலை நினைவு நாள்; அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம் பங்கேற்பு

இலங்கையில் தமிழர் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழினப் படுகொலை நினைவு இந்த வாரம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டது

 

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இதனை நினைவுகூறும் வகையில் மே 18-ந் தேதி தமிழினப் படுகொலை நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
 
இந்த இனப்படுகொலை நினைவு வாரம் முழுவதும்  கடைபிடிக்கப்பட்டு இன்று முடிவடைந்தது . யாழ்ப்பாண வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணி படுகொலை நிகழ்விடத்தில் இன்று தமிழினப் படுகொலை நினைவு நடத்தப்பட்டது. அனந்தி சசிதரன், சிவாஜிலிங்கம், குகதாஸ் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
 

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top