சீன தனியார் நிறுவனம் ஒலியைவிட 5.7 மடங்கு அதிவேகம் செல்லும் ராக்கெட்டை விண்ணுக்கு அனுப்பியது

 

ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்த ராக்கெட்டை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

 

சீனாவில் பெய்ஜிங் நகரில் இயங்கும் தனியார் நிறுவனமான ‘ஒன் ஸ்பேஷ்’ அதிவேக ராக்கெட் ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு ‘சாங்குயிங் லியாங்ஜியாங் ஸ்டார்’ என பெயரிடப்பட்டுள்ளது.

9 மீட்டர் நீளமும், 7200 கிலோ எடையும் கொண்டது. இது மணிக்கு 38, 742 கி.மீட்டர் வேகத்தில் பாய்ந்து செல்லக்கூடியது. அதாவது ஒலியை விட 5.7 மடங்கு அதிக வேகத்துடன் செல்லும் திறன் படைத்தது.

5 நிமிடத்தில் 273 கி.மீட்டர் தூரம் பறந்து செல்லும். அந்த அளவு அதிக திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. ராக்கெட் வயர்லஸ் தகவல் தொடர்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் நேற்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த தகவலை ‘ஒன் ஸ்பேஷ்’ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஷு சாங் தெரிவித்தார்.

 

மேலும், அவர் கூறும் போது, ‘‘எங்கள் நிறுவனம் முதன் முறையாக வணிக ரீதியிலான ராக்கெட் தயாரித்துள்ளது. இதன்மூலம் செயற்கைகோள்களை அனுப்ப பல நாடுகள் எங்களை தொடர்பு கொண்டுள்ளன’’ என்றார்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top