தமிழினப்படுகொலை நாளான இன்று சிறிலங்கா அரசு நிர்வாக இணையங்களில் போராளிகள் ஊடுருவல்

 

2009ம் ஆண்டின் இந்த நாட்கள் மிகவும் கொடூரமானவை

ஒன்றரை லட்சம் தமிழர் கொல்லப்பட்டதன் உச்ச நாட்கள் மே 17, 18,19. ஒரு இனத்தின் விடுதலைக் கனவு நம் கண்ணுக்கு முன்னாலேயே புதைக்கப்பட்டது

.

உணவின்றி, தண்ணீர் இன்றி, கை இழந்தும், கால் இழந்தும் பங்கருக்குள் பதுங்கிக் கிடந்தவர்கள்,

பங்கருக்குள் வெளியே செல்ல முயற்சித்து ஷெல் குண்டுகள் அடித்து இறந்தவர்கள்,

இறந்தவர்களை புதைக்கக் கூட வழியில்லாமல் தெருக்களிலியே அப்படியே விட்டுவிட்டு நகர்ந்து சென்ற மக்கள்,

பெரும் ஓசையுடன் நுழையும் பிரம்மாண்ட ராணுவ டாங்கிகள் மண்ணில் வீரமரணம் அடைந்து கிடந்த மாவீரர்களை அடையாளம் தெரியாமல் மண்ணோடு மண்ணாக ஏற்றி புதைத்து விட்டு சென்ற அவலம்,

பாலுக்காக கதறி அழுத குழந்தைகள், No fire Zone களில் ஒரு குவளை கஞ்சிக்காக நீண்ட வரிசையில் காத்துக் கிடந்த தமிழ்க்குழந்தைகள்,

காயம்பட்டவர்களை ஏற்றி அனுப்ப கப்பல் வருமா என்று காத்துக் கிடந்தே இறந்து போன மக்கள்,

ஒரு குவளை அரிசிக்காக தேடி ஓடிய போது முதுகுக்கு பின்புறமாக வானத்திலிருந்து விழுந்த குண்டுகள்,

மருத்துவமனைகளாக மாற்றப்பட்ட மர நிழல்கள்,

ரத்தத்தினை ஏற்றுவதற்குரிய உபகரணங்கள் இல்லாததால் பிளாஸ்டிக் கவர்களில் வைத்து ஏற்றப்பட்ட ரத்தம்,

தந்தை எங்கே போயிருப்பார் தாய் எங்கே போயிருப்பார், தங்கை எங்கே இருப்பார் என தேடித் திரிந்த இளவல்கள்,

No Fire Zone களுக்குள் பறந்து வந்து விழும் குண்டுகளிலிருந்து தப்பிக்க அடுத்த Zoneஐ தேடி ஓடும் மக்கள்,

இந்த இனப்படுகொலை கொடுத்த வலியினை நாம் மறக்கப்போவதில்லை. அதன் பின் செயல்பட்ட இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து. சீனா போன்ற நாடுகளின் துரோகத்தையும் மறக்கப்போவதில்லை. இந்த நிலையில் இனப்படுகொலை நாளான நேற்று தமிழீழத்தில் சிறிலங்கா இணையங்கள் முடக்கப்பட்டு தமிழீழ தேசிய கொடியுடன், “எம்தலைவர் சாகவில்லை, புலிகள்படை தோற்கவில்லை என்ற பாடலுடன்”

 

மே18_தமிழின_அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா தூதுவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத் தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப் படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும் ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது…

 

அமெரிக்காவையே ஆட்டம்காண வைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும்.

 

அது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.என எதிர்பார்க்கப்படுகிறது

ஊடுருவிய இணையங்கள்;

கேரளா சிறிலங்கா துதூவராலய இணையம்

http://slhckerala.org/article_details.php?articleid=NTM=

http://slhckerala.org/

 

சீனா  சிறிலங்கா   துதூவராலய இணையம்

http://www.slemb.com/third.php?menu_code=1&rid=46&lang=cn

 

சிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு

http://www.tourismmin.gov.lk/sinhala/news_view.php?news_id=1

 

இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்

http://www.cgijaffna.org/ckfinder/userfiles/files/ltte-flag-300-news.jpg

 

குவைத் தூதுவராலய இணையம்

http://kuwaitembassy.net/news.php?news_id=275

 

சிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம்  http://www.dolgnwp.lk/

 

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள்

http://actuaries.org.lk/

http://www.batticaloa.mc.gov.lk/event.php?id=18

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top