காவிரி நதிநீர் பங்கீடு’ என்பதை நீக்கி ‘மேலாண்மை வாரியம்’ என பெயர் வைக்க ஒப்புதல்

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக வரைவு செயல் திட்டத்தில் உள்ள அமைப்புக்கு மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க மத்திய அரசு சம்மதித்துள்ளது.

 

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல்  செய்தது. அதில், நதி நீர் பங்கீடு தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஒரு குழுவை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட அந்த குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர் எனவும், குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அந்த குழுவின் அதிகாரங்கள் மற்றும் வரம்புகள் குறித்த விவரமும் இடம்பெற்றுள்ளது.

 

இந்நிலையில், காவிரி வழக்கின் விசாரணை இன்று மீண்டும் தொடங்கியது. அப்போது தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் சார்பில் அறிக்கைகளை தாக்கல் செய்யப்பட்டன.

வரைவு செயல் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. வரைவு செயல் திட்டக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் இருக்கக் கூடாது என்றும் தலைநகர் டெல்லியில் இருக்க வேண்டும் என்றும் தமிழக அரசு வாதிட்டது. அப்போது அந்த குழுவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க தயார் எனவும், செயல் திட்டக் குழுவின் தலைமையகம் டெல்லியில் வைப்பதற்கும்  தமிழ்நாட்டு கோரிக்கையை ஏற்று இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்தது.

வழக்கு மீண்டும் நாளை உச்ச நீதிமன்றத்தில் வருகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top