காமடியன் எஸ்.வி.சேகர் விவகாரம்;பத்திரிக்கையாளர்கள் மீது சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி

 

பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி அவதூறு கருத்து தெரிவித்த சினிமா காமடியன் எஸ்.வி.சேகருக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள், அவரது வீட்டின் மீது கல்வீசி தாக்கினர்.

இந்த சம்பவம் தொடர்பாக 30 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், வழக்கை சி.பி.ஐ. அல்லது சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்ற கோரி வழக்கறிஞர் பிரேமானந்த் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனுதாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன், நீதிபதி எம். தண்டபாணி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பாதிக்கப்பட்ட காமடியன் எஸ்.வி.சேகர் நீதி மன்றத்தை நாடாத போது,என்ன நோக்குடன் பொது நல வழக்கு தாக்கல் செயயப்பட்டுள்ளது? அவர் நீதி மன்றத்தை நாட முடியாத அளவுக்கு ஒடுக்கப்பட்டவரா? மூன்றாவது நபருக்காக பொது நல வழக்கு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி, மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top