காங்கிரஸைத் தவிர வேறு யாருடனும் கூட்டணி இல்லை: குமாரசாமி திட்டவட்ட அறிவிப்பு

 

 

காங்கிரஸ் கட்சியுடன்தான் கூட்டணி என்பது முடிவாகிவிட்டநிலையில், வேறு யாருடனும் பேச்சுக்கு தயாராக இல்லை என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமி இன்று தெரிவித்தார்.

 

கர்நாடகத்தில் உள்ள 222 கடந்த 12-ம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

 

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், பாஜகவுக்கு 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37 இடங்களும், இதரகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.

 

தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காதநிலையில், பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாக்கி உள்ளது

 

காங்கிரஸ் கட்சியால் மீண்டும் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து, அவர்களை ஆட்சி அமைக்கக் கோரியது. இதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள்.

 

அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனால், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. தனிப்பெரும் கட்சியா பாஜகவை ஆட்சி அமைத்து 7 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூறியுள்ளதாக பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஒரு பொய்யை அவிழ்த்து விட்டார். ஆனால், ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இல்லை.

 

இந்நிலையில், பாஜகவினர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க, மற்ற மாநிலங்களில் செய்தது போல் குதிரை பேரத்தில் இறங்கி இருக்கிறது. காங்கிரஸ், ஜடிஎஸ் எம்எல்ஏக்கள் இழுக்கும் திட்டத்துடன் காய்களை நகர்த்தத் தொடங்கி இருக்கின்றனர். குறிப்பாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் உள்ள லிங்காயத் சமூகத்தின் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டுகிறது

 

.லிங்காயத் சமூகத்தினர் தங்களை சாதிய ரீதியாக அடையாளம் கொள்வதால் எடியுரப்பா லிங்காயத் சமூகம் என்பதால் தாங்கள் இந்துக்கள் அல்ல என்பதையும் மீறி சாதிய ரீதியாக பாஜக பக்கம் போய் விடுவார்கள் என்கிற பயம் காங்கிரஸ்க்கு இருக்கிறது.

 

இதற்கிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமியுடன் பேச்சு நடத்தி, கூட்டணி ஆட்சிக்கு பாஜக திட்டமிட்டது. இதற்காக பாஜக மூத்த தலைவர்கள் மூலம் தூது அனுப்பி பேசியதாகக் கூறப்பட்டது.

 

இந்நிலையில், இன்று காலை பெங்களூரு நகரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க எச்டி குமாரசாமி வந்தார்.

 

அப்போது அவரிடம் பாஜகவினர் உங்களுடன் பேச்சு நடத்துவதாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், ”காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துவிட்டோம். இந்த சூழலில் யாருடனும்,(பாஜக) பேச்சு நடத்த நாங்கள் தயாராக இல்லை. காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முடிவில்தான் இன்று எம்எல்ஏக்கள் கூட்டத்தையும் கூட்டி இருக்கிறோம். ஆதலால், இதைத் தவிர்த்து வேறு எந்த முடிவும் நாங்கள் எடுக்கப்போவதில்லை” எனத் தெரிவித்தார்.

 

எச்.டி.குமாரசாமியின் இந்த திட்டவட்டமான அறிவிப்பு பாஜகவினருக்கு பெரும் பீதியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top