தென்னிந்தியாவிற்குள் நுழையும் பாஜகவுக்கு வாழ்த்துகள்; தமிழகத்திற்கு துரோகம் செய்யும் ஓ.பி.எஸ்

 

கர்நாடகத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மோடி மற்றும் அமித்ஷாவிற்கு முந்திக்கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

கர்நாடகாவில் மே 12ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், 222 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், ஆரம்பம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. தற்போது பாஜக அதிக முன்னிலை பெற்று மற்ற கட்சிகளை விட முன்னணியில் உள்ளது. எனவே, பாஜக தொண்டர்கள் வெற்றியினை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றிருப்பதற்கு மோடி மற்றும் அமித்ஷாவிற்கு வாழ்த்துகள். என கூறினார்

 

. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு அனைத்து எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் நல்லது. ஆனால், இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டப்பட தேவையில்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அமித்ஷாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியினை ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிந்துள்ளார்.

அதில், கர்நாடகத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கும், பிரம்மாண்டமான முறையில் தென்னிந்தியாவில் நுழையும் பாஜகவிற்கும், அக்கட்சியின் தலைவர் அமித் ஷாவுக்கும் வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

தற்போது கர்நாடகாவில் நிலைமை மாறி உள்ளது காங்கிரசும் மதச்சார்பற்ற  ஜனதா தள்ளும் இணைந்து ஆட்சி அமைக்கிறார்கள்,இது தெரியாமல் முந்திக்கொண்டு வாழ்த்து சொன்னது மட்டுமல்லாமல் தென் இந்தியாவிற்குள் பாஜக நுழைவதை திட்டமிட்டு வரவேற்கும் துணைமுதல்வர், பாஜக வின் பினாமி ஆட்சி நடத்துகிறார் என்பது பகிரங்கமாக வெளிபடுத்தப்பட்டு இருக்கிறது.

தென் இந்தியாவிற்குள் பாஜக நுழைவதற்கு  திட்டமிட்டு வேலை செய்யும் எடப்பாடி ,பன்னீர் செல்வம் அரசு தமிழ் நாட்டின் உரிமைகளை எப்படி மத்திய பாஜக அரசிடமிருந்து  பெற்றுத்தருவார்கள்?தமிழகத்துக்கு துரோகம் செய்வதற்குத்தான் இவர்களை இன்னும் ஆட்சி நடத்த விட்டிருக்கிறது பாஜக என்று சமூக ஆர்வலர்கள் சமூகவலைத்தளங்களில் எழுதுகிறார்கள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top