இந்தோனேசியா குண்டு வெடிப்பு சம்பவங்கள் கோழைத்தனமானது; அதிபர் கடும் கண்டனம்

 

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்கள் கோழைத்தனமானது என அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

 

இந்தோனேசியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான சுரபயாவில் காவல்துறை தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இதில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு போலீஸ்காரர் உயிரிழந்தார். மேலும், நான்கு போலீஸ் அதிகாரிகள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று, இதே பகுதியில் உள்ள தேவாலயங்களில் அடுத்தடுத்து  நடத்திய தற்கொலைத் தாக்குதல்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தொடர் தாக்குதல்களுக்கு இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “கோழைத்தனமான இந்த தாக்குதல் சம்பவங்கள், வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான  செயல்” என தெரிவித்தார்.

மேலும், புதிய பயங்கரவாத தடுப்புச்சட்ட மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாவிடில், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக புதிய கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் தொடர் தாக்குதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top