ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் என்கவுண்டர்; 7 மாவோயிஸ்ட்கள் ஒரு அப்பாவி ஆதிவாசி சுட்டுக்கொலை

 

 

ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் கோலங்கி கிராமம் அருகே உள்ள  வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் ரகசிய கூட்டம் நடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு நேற்று போலீசாரும், சிறப்பு  பாதுகாப்பு படையினரும் விரைந்து சென்று மாவோயிஸ்டுகள் இருந்த  இடத்தை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இச்சம்பவத்தில் 2 பெண்கள் உள்பட 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

 

 

இதேபோல் பலாங்கிர் மாவட்டம் தட்காமல் கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் மற்றொரு மாவோயிஸ்டு கும்பல் கூடி இருப்பதாக தகவல் அறிந்து பாதுகாப்பு படையினர் அங்கு சென்றனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

 

இன்றும், கந்தமால் மாவட்ட வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு துப்பாக்கி சூடு நடத்தினர்  அதில் ஆதிவாசி  ஒருவர் கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையினர் என்ற பெயரில் காட்டை காப்பாற்றும் ஆதிவாசிகளை சோதனையை தீவிரப்படுத்தி சுட்டுக்கொல்வது மனித உரிமை மீறல்.பாதுகாப்பு படையினர் பொறுப்போடு நடந்துகொள்வது நல்லது என்று சமூக நல விரும்பிகள் கண்டிக்கின்றனர்

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top