ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா?

 

 

செய்தியும் உண்மையும்:

நேற்றிலிருந்து சமூக வலைதளங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவுகிறது. அது நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த ’ஜெம் லேபரட்ரி’ என்ற நிறுவனம். நாங்கள் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹெட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிடலாமென்று இருக்கிறோமென்று சொல்லியிருக்கும் செய்தி தான் அது. இது உண்மையான செய்திதான் என்றாலும், இதனை வைத்துக்கொண்டு தமிழகத்திலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கிற திட்டமே தடுக்கப்பட்டது போல ஒரு போலியான தோற்றம் இயல்பாகவே உருவாகி வருகிறது. இது முற்றிலும் தவறானதாகும்.

 

காவிரி பாசன பகுதிகளில் பூமிக்கடியில் இருக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற வாயுக்களை எடுக்க 2016இல் மத்திய அரசு ஓப்பந்தம் வெளியிட்டது. அதன்படி கர்நாடகாவை சேர்ந்த ஜி.எம் குரூப் நிறுவனம் புதிதாக ஜெம் லேபரட்ரி என்ற துணை நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் காவிரி பாசனப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் உரிமைத்தை ஓ.என்.ஜி.சி நிறுவனத்திடமிருந்து பெற்றது. ஆனால் தொடர்ந்து இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்ததாலும், பசுமை தீர்ப்பாயத்தில் இத்திட்டம் குறித்த வழக்குகள் இருந்ததாலும் இந்த திட்டத்தை ஜெம் லெபரட்ரி நிறுவனம் தொடங்க தொடர்ந்து தாமதமானது,. இதனால் பெரும் நட்டத்தை சந்தித்த நிறுவனம் இந்த திட்டத்திலிருந்து விலக முடிவெடுத்திருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்தமாகவே ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவில்லை என்பது தான் உண்மை.

 

ஏனென்றால் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டமென்பது வெறும் நெடுவாசல் பகுதிகளில் மட்டும் எடுக்கும் திட்டம் கிடையாது. அது புதுச்சேரியிலிருந்து இராமநாதபுரம் வரை கிட்டத்தட்ட தமிழகத்தின் இரண்டு பங்கு இடங்களில் எரிவாயு எடுக்கும் திட்டம். அதில் ஒரு சின்ன பகுதிதான் நெடுவாசல் ஆகும். இதோ  மத்திய அரசு தமிழகத்தில் எங்கெல்லாம் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கலாமென்று வெளியிட்டு இருக்கும் தகவல் இது.

 

இதன்படி தமிழகத்தில் 61,000சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இடத்தில் எந்த இடத்தில் வேண்டுமென்றாலும் இவர்கள் துளையிட்டு எரிவாயு எடுக்கலாம். அதன்படி ஜீலை 2017இல் இந்திய ஒன்றியத்திலிருக்கிற 55 பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க மத்திய அரசு புதிய விதிமுறையை (Open Acreage License Policy (OALP) ) வகுத்து புதிய ஒப்பந்தத்தை கோரியது. அதன்படி 9 நிறுவனங்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன்.

 

 

இந்தியாவிலே முதன்முதலாக பூமியிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு நிலத்தை அதாவது எரிவாய் பாயிண்ட்டை ஏலம் விடும் முறை நடந்தது.இதில் உலக அளவிலும் இந்திய அளவிலும் எரிவாய் எடுக்கும் பெரிய பெரிய கார்பரேட் நிறுவனங்கள் கலந்துகொண்டு ஏலம் எடுத்தன.

 

அதில் 55/40 இடங்களை லண்டனை சேர்ந்த வேதாந்தா குழுமத்திற்கு (துத்துக்குடியை சுற்றியிருக்கிற மக்களை புற்றுநோய்க்கு உள்ளாக்கிவரும் ஸ்டெர்லை நச்சு ஆலையை நடத்திவரும் நிறுவனம்) கடந்த 08.05.18 செவ்வாய்கிழமை அன்று ஒன்றிய அரசு ஒதுக்கியிருக்கிறது. http://www.business-standard.com/article/companies/vedanta-may-bag-40-of-55-oil-and-gas-blocks-under-first-oalp-auction-118051000011_1.html. இதில் முன்று இடங்கள் காவிரி பாசனப்பகுதி ஆகும்.

 

எனவே ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்தவில்லை. அது வேறு ஒருவருக்கு கைமாற்றிக்கொடுத்திருக்கிறது என்பதை தான் உண்மை.

 

இந்த ஏலம் கார்பரேட் கம்பெனிகளுக்கு அதாவது   முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாகக் கருதப்பட்டது.  அனைத்து வகையான ஹைட்ரோகார்பன்களுக்கும் மத்திய பாஜக அரசு  ஒற்றை உரிமத்தை வழங்கியது. எரிவாய்,மீத்தேன் ,பெட்ரோல் ,என எது கிடைத்தாலும் இவர்கள் எடுத்துக்கொள்ளலாம். இவற்றுக்கு தனித்தனியாக உரிமம் வாங்கவேண்டிய அவசியம் இல்லை. மற்றும்,மிக எளிமையான முறையில் மார்க்கெட்டிங் செய்யவும் அவர்கள் நினைத்த விலையில் சுதந்திரமாக விற்பதற்கும் விலை நிர்ணயத்துடனான எளிமையான வருவாய் பகிர்வு மாதிரிடன். இந்த ஏலம் நடந்து முடிந்தது.

 

 

செவ்வாயன்று அரசாங்கம் நடத்திய இந்த ஏலம் முறை என்பது இதுவரை இல்லாத மிகப்பெரிய நகர எரிவாயு உரிமம் விற்பனை என்பது குறிப்பிடத்தக்கது   174 மாவட்டங்களை உள்ளடக்கிய 86 புவியியல் பகுதிகள் வழங்கப்பட்டன. இந்தியாவின் மக்கள்தொகையில் 29 சதவிகிதம் மற்றும் புவியியல் பகுதியின் 24 சதவிகிதம் கொண்டதாக இது உள்ளடங்கி உள்ளது  ஆக, தமிழ்நாட்டில் .ஒரு ஜெம் நிறுவனம் போயி  நாசகார ஸ்டெர்லைட் கம்பெனி வந்துவிட்டது.தமிழ் பத்திரிகைகள் இது குறித்து இன்னும் செய்தி வெளியிடவில்லை.மாறாக அப்பாவி கிராமத்துக்காரர்கள் வெடிபோட்டு கொண்டாடுகிறார்கள்

 

கொண்டல்சாமி

 

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top