ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மரணம்

jana_1884722fஆந்திர மாநில முன்னாள் முதல்– மந்திரி ஜனார்த்தன ரெட்டி இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜனார்த்தன ரெட்டி 1972–ல் அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் ஆட்சியில் பல துறைகளுக்கு மந்திரியாக பதவி வகித்தார். 1990–92–ம் ஆண்டு ஆந்திர முதல்–மந்திரியாக பதவி வகித்தார்.

தனது ஆட்சி காலத்தில் இவர் நக்சலைட்டு இயக்கத்துக்கு தடை விதித்தார்.

இதன் காரணமாக அவர் 2007–ம் ஆண்டு நக்சலைட்டுகள் தாக்குதலுக்குள்ளானார். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

ஜனார்த்தனரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணம் அடைந்தார்.

ஐதராபாத்தில் சோமாஸ்ரீ கூடாவில் உள்ள அவரது வீட்டில் உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கவர்னர் நரசிம்மன், அரசியல் கட்சி தலைவர்கள் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி, கிரண்குமார் ரெட்டி உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மறைந்த ஜனார்த்தன ரெட்டிக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், ராஜ்குமார், அசோக்குமார், கவுதம்குமார், பரத்குமார் என்ற 4 மகன்களும் உள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top