அம்பேத்கர் சட்டக் கல்லூரியை இடம் மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு; மாணவர்கள் விரோத சட்டம்

 

 

தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள 186 பேராசிரியர் பணியிடங்களுக்கு முறையாக தேர்வு நடத்தி நிரப்புவது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்துதர உத்தர விட வேண்டும் என்றும் அந்த வழக்கு மனுவில் கோரப்பட்டி ருந்தது.

 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இது தொடர்பாக ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையில் ஒரு குழு அமைத்து, பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக புதிதாக விதிகளை உருவாக்க உத்தர விட்டது.

 

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் மணிசங்கர், ‘‘மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 2008-ல் நடந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையிலான கமிட்டி அளித்த பரிந்துரையின்பேரில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை 2 ஆக பிரித்து காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மாற்ற அரசு முடிவு செய்தது. அதற்கான கட்டிடங்களும் கட்டப்பட்டு, தயார் நிலையில் உள்ளன. ஆனால், கல்லூரியை இடம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்துகின்றனர்’’ என்றார்.

 

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் முன்னாள் தலைமை நீதிபதி என்.பால்வசந்தகுமார் தலைமையிலான குழு ஆலோசனைப்படி நேர்மையாக நடத்த வேண்டும். மேலும், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்துக்கும், திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப் பெரும்புதூருக்கும் மாற்றுவது என்பது உயர் நீதிமன்ற உத்தரவுப்படிதான் நடந்து வருகிறது. நடப்பு கல்வியாண்டில் வகுப்புகள் வரும் ஜூலை 9-ம் தேதிதான் தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் சட்டக் கல்லூரியை இடமாற்றம் செய்ய வேண்டும். அந்தப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள், அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பை டிஜிபியும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.க்களும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 

எளிய மக்களை பற்றி கவலைப்படாமல் எல்லோரும் ஹெல்மட் அணியவேண்டும் என்று அவசரகதியில் சட்டம் இயற்றி அந்த சட்டத்தை எதிர்த்து போராடிய  வழக்கறிஞர்களின் வழக்கறிஞர் உரிமையை பறித்து, காவல்துறையினரால்  இந்த சட்டம் எளிய மக்களிடம் இருந்து பணம் பிடுங்க மட்டுமே பயன்படக்கூடிய ஹெல்மட் சட்டத்தை அமலுக்கு கொண்டுவர காரணமான நீதிபதி  என்.கிருபாகரன் தலைமையில்தான்  சட்டக்கல்லூரியை மாற்ற வேண்டும் என்ற உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இது மாணவர்கள் விரோத சட்டம். என்கிறார்கள் மாணவர்கள்

 

ஆனால்,உண்மை நிலவரம் என்ன? சட்ட கல்வி அதிகாரி கூறினார்.ஒருவர் கூறுகிறார் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் திருவள்ளூர் மாவட்டத்திற்கா இல்லை காஞ்சீபுரம் மாவட்டத்திற்கா  என தெரியவில்லை என்கிறார்

 

சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை திருவள்ளூர் மாவட்டத்திற்கும், காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும் மாற்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என தெரியவில்லை

 

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ளது. இது இந்தியாவில் 2-வது பழமை வாய்ந்த கல்லூரியாகும். இந்த சட்ட கல்லூரி ‘மெட்ராஸ் லா காலேஜ்’ என்று அழைக்கப்பட்டது. 1990-ம் வருடம் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த கல்லூரியை காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கும் இடம் மாற்றம் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

 

இந்த கல்லூரி காஞ்சீபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு மாற்றப்பட உள்ளது.

 

சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், நடப்பு கல்வியாண்டின் வகுப்புகள் ஜூலை 9-ந் தேதி முதல் தொடங்க உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. எனவே, அதற்கு முன்பாக சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்யவேண்டும். இந்த பணியில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பை போலீசார் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

 

 

ஆனால்,அந்த கட்டிடங்களை பொதுப்பணித்துறை இதுவரை எங்களிடம் ஒப்படைக்கவில்லை. இப்போது 3 வருட படிப்பு படித்துவரும் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள், 5 வருட படிப்பு படித்துவரும் மாணவர்கள் எந்த மாவட்டத்திற்கு செல்வார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இன்னும் எந்த முடிவும் நாங்கள் எடுக்கவில்லை. இதுகுறித்து அரசு தான் முடிவு செய்யும்.

 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-

 

கல்லூரியை மாற்றுவதில் அதிருப்தி அடைந்துள்ளோம். அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதராமல் எப்படி செல்வது. இப்போது படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டுக்கு பயிற்சிக்கு செல்வார்கள். அப்படி இருக்கையில் மாற்றம் செய்தால் எப்படி செல்லமுடியும்.

 

 

சட்டக்கல்லூரி அருகே 3 கிலோ மீட்டர் தூரத்திற்குள் கோர்ட்டு இருக்க வேண்டும் என்பது சட்டம். தினமும் ஐகோர்ட்டுக்கு புதிய கல்லூரி வளாகத்தில் இருந்து வர பஸ் கட்டணத்திற்கு ஏழை மாணவர்கள் என்ன செய்வார்கள்? எனவே படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை மாற்றக்கூடாது. என  கூறினார்கள்.

 

மக்கள்விரோத சட்டம் இயற்றிய நீதிபதி கிருபாகரன் இப்போது மாணவர்கள் விரோத சட்டம் இயற்றி இருக்கிறார் என்று உயர்நீதிமன்றத்தில் பல வழக்கறிஞர்கள் பேசிக்கொள்கிறார்கள்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top