நீட் தேர்வு எழுத மருத்துவ கவுன்சில் அறிவித்த வயது வரம்பை டெல்லி ஐகோர்ட் உறுதி செய்தது

 

 

இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தேசிய அளவில் நீட் என்ற பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கான வயது உச்ச வரம்பினை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. பொதுப் பிரிவினருக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்ச வரம்பு  25 என்றும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயது என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த உச்சவரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளாவைச் சேர்ந்த 2 பேர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக வயது உச்சவரம்பினை சி.பி.எஸ்.இ. நிர்ணயித்திருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இவ்வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், வயது உச்சவரம்பு தொடர்பான அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.  அதன்பின்னர் வழக்கு விசாரணை முடிந்த நிலையில், டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது, இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை உறுதி செய்த ஐகோர்ட், பொதுப்பிரிவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என்று தெரிவித்தது. இடஒதுக்கீட்டுப் பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்டோர் நீட் தேர்வு எழுத முடியாது என கூறியது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top