ஆடிட்டர் குருமூர்த்தி ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓ.; சுப்பிரமணியன் சுவாமி

 

நடிகர் ரஜினிகாந்தின் பி.ஆர்.ஓதான் ஆடிட்டரும் துக்ளக் ஆசிரியருமான குருமூர்த்தி என பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.

 

ரஜினிகாந்தின் அரசியல் ஆலோசகராக செயல்பட்டு வருகிறவர் குருமூர்த்தி என்பது அரசியல் வட்டாரங்கள் அறிந்த ஒன்று. குருமூர்த்தியின் ஆலோசனைப்படிதான் ரஜினி செயல்படுகிறார். பிரதமர் மோடியுடன் ரஜினிகாந்த் இணைய வேண்டும்; ரஜினிகாந்த் ஆட்சிக்கு வருவார் என்றும் குருமூர்த்தி கூறியிருந்தார்.

 

இதை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டரில்

“Subramanian Swamy ✔ @Swamy39 Media anchors call S. Gurumurthy CA as “RSS Idealogue”. There is no such post in RSS. They better call him Rajni Publicity Activist.” என்று கடினமாக சாடியுள்ளார். தம்முடைய ட்விட்டர் பக்கத்தில், குருமூர்த்தியை ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதி என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அப்படியான ஒரு பதவியே இல்லை. ஊடகங்கள் வேண்டுமானால் ரஜினிகாந்தின் விளம்பர செயற்பாட்டாளர் என அழைக்கட்டும் என கொதித்திருக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top