மலேசியா பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது – இன்று இரவு முடிவு தெரியும்

 

மலேசிய பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி மாலை அமைதியாக முடிந்தது. 3 மணி நிலவரப்படி 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது

 

222 உறுப்பினர்களை கொண்ட மலேசிய பாராளுமன்றத்துக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரதமர் நஜீப் ரஷாக்கின் ஆளும் பி.என்.கட்சிக்கும், முன்னாள் தலைவர் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது

 

அனல் பறந்த பிரசாரம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. அதற்காக அமைக்கப்பட்டுள்ள வாக்கு சாவடிகளில் வரிசையில் நின்று பொதுமக்கள் ஓட்டு போட்டனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

 

 

3 மணி நிலவரப்படி 69 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை சற்று நேரத்தில் தொடங்குகிறது. முடிவுகள் இன்று நள்ளிரவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இந்த தேர்தலில் பிரதமர் நஜீப்பின் பி.என். கட்சி மீண்டும் வெற்றி பெறும் என கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் மகாதிர் முகமதுவின் எதிர்க் கட்சி கூட்டணியும் அதிக இடங்களை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் ஆட்சி அமைப்பதில் பி.ஏ.எஸ். கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என தெரிகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top