சிறுநீரக செல்களை ஆராய்ச்சி செய்த அமெரிக்க இந்தியருக்கு 16 லட்சம் டாலர் உதவித்தொகை

 

 

அமெரிக்காவில் உள்ள ஹவுஸ்டன் பல்கலைக்கழக மருந்தியல் பேராசிரியர் தாஹிர் ஹுசேன் சிறுநீரகத்தில் இயற்கையாக AT2R(angiotensin type 2 receptor) என்ற புரதம் இருப்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளார். இந்த AT2R புரதத்தை பயன்படுத்தி சிறுநீரக  எரிச்சலை கட்டுப்படுத்த முடியும். பொதுவாக உடல் பருமன் உள்ளவர்களுக்கு  சிறுநீரக எரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு பிரட்சனைகள் ஏற்படுகின்றன.

அவ்வாறு பாதிப்புக்கு உள்ளனவர்களின் சிறுநீரகத்தில்  AT2R புரதத்தை அதிகளவு சுரக்க செய்வதன் முலம் சிறுநீரக  பிரச்சனைகள் கட்டுப்படுத்தப்படும் என  தனது ஆய்வில் தாஹிர் ஹுசேன் கண்டறிந்துள்ளார். இந்த புரதம் அடுத்தகட்ட ஆய்வுகளுக்கு பின்னர் முறையாக பயன்படுத்தப்பட்டால் சிறுநீரக காயங்கள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

சிறுநீரகத்தின் உள்ளேயே  இயற்கையாக சுரக்கும் இந்த புரதம் சிறுநீரகத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வுக்காக அமெரிக்க தேசிய சுகாதார ஆய்வு மையம் தாஹிருக்கு 16 லட்சம் டாலரை உதவித் தொகையாக வழங்கியுள்ளது.

பேராசிரியர் தாஹிர் ஹுசேன் இந்தியாவின் அலிகார் பல்கலைக்கழக்கத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top