புதுச்சேரி ரசாயன தொழிற்சாலைக்கு எதிர்ப்பு; கருத்துக்கேட்பு கூட்டத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு

 

புதுச்சேரி காலாப்பட்டில் கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதலில் ஈடுபட்டவர்களை துப்பாக்கியால் சுட்டும் , கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல்துறையினர் கலைத்தனர்.

 

தனியார் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்கவும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும் போலீசார் தடியடி நடத்தி துப்பாக்கியால் சுட்டனர்.

புதுச்சேரியில் காலாப்பட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலை உற்பத்தி இரு மடங்காக உயர்த்துவது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது, முன்னதாக இந்த கூட்டத்தை கண்டித்து மீனவர்கள் கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனிடையே கூட்டத்தில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

மேலும் மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்கவும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரவும் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி, கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர்.இதனையடுத்து போராட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. எனினும்  மோதல், துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் காலாப்பாட்டில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top