தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்க முடியாது; தமிழக மாணவர்களுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

உச்சநீதிமன்றம் தமிழக மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு மையம் விவகாரத்தில்.குறைந்த பட்ச மனிதாபிமானம கூட இல்லாமல் தமிழக மாணவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

 

தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கிய தேர்வு மையங்களில் தான் நீட் தேர்வு எழுத வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக மே 6-ந்தேதி நடக்க உள்ள ‘நீட்’ தேர்வில், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவிலும், ராஜஸ்தானிலும் தேர்வு மையங்களை ஒதுக்கி உள்ளனர் இதனால் .மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.தமிழ் நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்க கேட்டனர்.

 

தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது.

இதனை எதிர்த்து மாணவர்கள் வழக்கு தொடர்ந்தார்கள் வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ‘அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டால், மாணவர்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். பொருளாதார ரீதியாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்தி தமிழக மாணவர்களுக்கு தமிழகத்துக்குள் தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

 

இதையடுத்து, தமிழக மாணவர்களுக்கு, தமிழகத்திலேயே தற்போது தேர்வு மையங்களை அமைக்க அவகாசம் இல்லை என்று சி.பி.எஸ்.இ. தெரிவித்து உச்சநீதிமன்றம் சென்றது

 

சிபிஎஸ்இ-யின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்கள் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

 

காவிரியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி ,தமிழர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்குவதில் உச்சநீதிமன்றம் சலித்ததே இல்லை என சமூக ஆர்வலர்கள் எழுத துவங்கிவிட்டார்கள்

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top