தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களின் இருக்கைகள் நீக்கம்

 

தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக்கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டது திரையுலகினர் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டன. அதன்படி விருது வழங்கும் விழா டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

 

வழக்கமாக தேசிய விருதுகளை நாட்டின் ஜனாதிபதி தான் வழங்குவார். ஆனால், இந்த முறை அடையாளமாக 11 பேருக்கு மட்டுமே ஜனாதிபதி விருது வழங்குவார் என்றும், மற்றவர்களுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி ஸ்மிருதி இராணி விருதுகளை வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

இது விருது வென்றவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து விருது பெற உள்ள 68 பேர் திரைப்பட விழாவில் பங்கேற்க போவதில்லை என்று கடிதம் எழுதினர்.

இதையடுத்து விருது வழங்கும் விழாவை புறக்கணித்த திரைக் கலைஞர்களுக்கான இருக்கைகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனபதிபதி ராம்நாத் கோவிந்தும் விழாவில் பங்கேற்கவில்லை.

 

விருதுகளை ஸ்மிருதி இராணி மற்றும் விஜய ரதோர் விருதுகளை வழங்கி வருகின்றனர்.

 

திரையுலகினரின் இருக்கை நீக்கப்பட்டது கலைஞர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவில் சிறந்த தமிழ்படத்திற்கான விருதை வென்ற டூலெட் பட இயக்குநர் உள்ளிட்ட 68 பேர் பங்கேற்கவில்லை.

 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாடகர் கே.யேசுதாஸ், ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றுள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top