மனித நேய மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டம் ;தலைவராக ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு

 

 

சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு தேர்தல் கடந்த 3 மாதங்களாக கிளை முதல் மாவட்டம் வரை நடைபெற்றது. இதன் இறுதியில் சென்னை காமராஜர் அரங்கில் தலைமை பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 1251 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த பொதுக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவராக பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலாளராக அப்துல் சமதும். பொருளாளராக கோவை உமரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

இந்த கூட்டத்தில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

தமிழக மக்களின் உரிமைகளை புறந்தள்ளி காவிரி மேலான்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய அரசை பொதுக்குழு கண்டிக்கிறது.

பாராளுமன்றத்தில் அனைத்து மதசார்பற்ற கட்சிகளும் ஓர் அணியில் நிற்க வேண்டும். மூன்றாம் அணி அமைப்பு தேவையில்லாத முயற்சியாகும்.

பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தவறானது. அது பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு முரணானது. மின்னணு வாக்குப் பதிவு எந்திர முறை கைவிடப்பட வேண்டும்

பொதுவாழ்வில் போற்றத்தக்க வகையில் பங்களிப்புகளைச் செய்து வரும் பெண்களை பா.ஜ.க. தலைவர்கள் வரம்பு கடந்து அநாகரீகமாகவும் ஆபாசமாகவும் பேசி வருவதை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆளுநர் பதவிக்கு உரிய மரபுகளை மதிக்காமலும் விழுமியங்களை வீழ்த்தும் வகையிலும் செயல்பட்டு வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். நியூட்ரினோ திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top